யாழ். கொக்குவிலில் பட்டப்பகலில் வீதியால் சென்ற வயோதிபப் பெண்ணின் தங்கச் சங்கிலி அபகரிப்பு

யாழ். கொக்குவில் பகுதியில் வீதியால் சென்ற வயோதிபப் பெண்ணைக் கடுமையாகத் தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(28) மாலை கொக்குவில் மேற்கு கேணியடிப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொக்குவில் மேற்கு கேணியடிப் பகுதி வீதியால் நேற்று மாலை குறித்த வயோதிப மாது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்ச் சைக்கிளொன்றில் வந்த இருவர் குறித்த பெண்மணியை நிலத்தில் தள்ளி விழுத்தியுள்ளனர். தள்ளிவிழுத்தியதுடன் மாத்திரம் நின்றுவிடாது குறித்த பெண்மணியைக் கடுமையாகத் தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மித்த பகுதியில் நின்ற சில இளைஞர்கள் சங்கிலித் திருடர்களை விரட்டிச் சென்ற போதும் அவர்கள் பிடிபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுகாதார சேவைக்குழு உறுப்பினர்களின் சேவைக்காலம் நீடிப்பு!
சவாலை திறமையாக எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது – அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தேவையான தலைமைத்...
விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டம் - தேசிய டெங்...
|
|