யாழ். குடாநாட்டு கல் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!

யாழ் மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் இதர தேவைகளுக்கு ஏற்பட்டுள்ள கல் தட்டுப்பாட்டை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நேற்றுக் காலை ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. இதன்போது, யாழில் ஏற்பட்டுள்ள கல் தட்டுப்பாட்டை டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து குடாநாட்டிற்கு கல் கொண்டு வருவது தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, மாவட்ட செயலரின் ஊடாக பிரதேச செயலர், கிராம சேவகரின் சிபாரிசுடன் கல் பெறும் ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
யாழ்.பல்கலையில் இம்முறை 2500 பேருக்கு பட்டமளிக்க ஏற்பாடு!
அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் – கதவு திறந்...
நடைமுறையில் உள்ள நிலைமைகளே விலை அதிகரிப்பு முடிவெடுக்க கட்டாயப்படுத்தியது - அமைச்சர் நாமல் சுட்டிக்...
|
|