யாழ். குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்த பொலிசார் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு!

யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிசார் பாதுகாப்பு தரப்பினர் திருட்டினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்
இந்நிலையில் திருட்டினை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் யாழ் குடாநாட்டு வீதிகளில் போலிசாரின் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் அணியினர் மாலை வேளைகளில் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக பயணிப்போரை சோதனையிட்டதுடன் பயணிக்கும் வாகனங்களையும் சோதனை இடம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
அத்தியாவசிய சேவை தவிர்நது தேவையற்ற விதத்தில் வீதியில் பயணித்தவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது
அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் மூடப்பட்டிருந்த கடைகள், பாடசாலைகள் தேவாலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|