யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் – பொலிஸ் மா அதிபர்!

Monday, July 31st, 2017
யாழ். குடாநாட்டினை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் இராணுவம் மற்றும் ஏனைய தரப்பின் உதவியுடன் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆவாகுழுவினால் வெட்டப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சென்று பார்வையிட்டார்.

அதன்பின்னர், யாழ்.பொலிஸ் தலைமையத்தில் சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்..மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

அதன்போது,  யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுப்பிரயோகம் மற்றும், பொலிஸார் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

அந்த சந்திப்பின் போது, யாழ்.குடா நாட்டில் தற்போது குற்றச்செயல்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.

ஆவாகுழுவினால் வெட்டப்பட்ட இரு பொலிஸாரின் நிலைமை சற்று மோசமாக இருக்கின்றது. சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவாக்குழுவிற்கு தலைமை தாங்கியுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் தலைமை தாங்கியுள்ளார். அவர் உட்பட 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.
ஆத்துடன், இதுவரை காலமும் மக்களிற்காக பாதுகாப்பினை அதிகரிக்காமல் இருந்தோம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் இருக்கின்றது. இங்கு காணப்படும் நிலமைகள் மக்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை.

எனவே, விசேட அதிரடிப்படையின் உதவியுடன், இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியையும் பெறவுள்ளோம். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்க முடியாது. எனவே, தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பினைப் பலப்படுத்தவுள்ளேன்.

அதேவேளை, யாழ்.மாவட்டம் மட்டுமன்றி வடமாகாணத்தில் இவ்வாறான சம்பவங்களைப் புரிபவர்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரான எனக்கு 0717582222 அல்லது எனது செயலாளருக்கோ 0718592020  தகவல்களை நேரடியாக வழங்க முடியும்.

அதுமட்டுமன்றி வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பகிரங்கபடுத்தமாட்டோம்அதற்கான உறுதிமொழியினை வழங்குவதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். மணல் மற்றும் கடத்தல், கப்பங்களுக்கு எதிரான தகவல்களையும் உடனடியாக தெரிவிக்குமாறும், இவ்வாறான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமென்றும் பொது மக்களை ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: