யாழ்., கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

Sunday, December 6th, 2020

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புரெவிப் புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts:

நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதைப் போன்று சீனா மற்றும் ஜப்பானிடமிரு...
அரச நிர்வாகத்தை சீரமைக்க அனைவரும் உறுதியளித்துள்ளனர் - அரச ஊழியர்கள் வசதியான உடையில் வரலாம் என்ற சுற...
இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஐ.நா மனித ...