யாழ் .ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் படுகொலை: சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு !
Wednesday, February 15th, 2017
யாழ் .ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப் பெண் ந. ஹம்சிகா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளிடம் யாழ்.ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.றியாழ் முன்னிலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(14) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம்-24 ஆம் திகதி நான்கு வயதேயான பெண் குழந்தையின் தாயான ந. ஹம்சிகா என்ற இளம் குடும்பப் பெண்மணி அவரது வீட்டில் தனித்திருந்த போது கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சியான வாய்பேச முடியாத சிறுவன், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் உட்பட ஐவரிடம் இதன் போது தனித்தனியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
தீவகத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வேலணை பிரதேச சபை தவிசாளர் ...
வடக்கில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!
இணையத்தளங்கள் தொடர்பில்பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை!
|
|
|


