யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப்  பிரதேசத்தில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு

Saturday, March 12th, 2016

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப்  பிரதேசத்தில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக்  கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரமே  மேற்படி ஹெரோயின்  போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வல்வட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமானாறு அக்கரை கடற்கரைப்  பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை (12-02-2016) காலை 8.30 மணியளவில் இவை மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

vvt-heroin-01

Related posts:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 14 பேர் மரணங்கள்பதிவு - ஒருவரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நி...
புதிய அமைச்சர்கள் சம்பளத்தை கைவிடுவதாகவும், ஏனைய சலுகைகளுக்கு வரம்பு விதிக்கப்படும் பிரதமர் ரணில் வி...
பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்க உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்க...