இராணுவ தளபதி – சீன பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு!
Thursday, September 12th, 2019
இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் க்ஷூ ஜியன்வெலுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
எந்த கஷ்டமான நேரத்திலும் சீனா இலங்கையுடன் இணைந்திருக்கும் என சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இராணுவ தளபதியிடம் கூறியுள்ளார்.
அதேவேளை சீனாவுடனான தொடர்புகளை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வேண்டும் என சவேந்திர சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பின் இறுதியில் இருவரும் நினைவு பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளதாக இராணுவத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
Related posts:
புதிய VAT திருத்தத்தின் ஊடாக தனியார் சுகாதார சேவைகளுக்கு நிவாரணம்!
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர...
வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேணவேண்டும் - ஜனாதிபதி ரணில் த...
|
|
|


