யாழ்ப்பாணம் வருகைதரும் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க!
Sunday, February 13th, 2022
கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
குறித்த விஜயம் எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுற்றுப்பயணத்தில் மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவுள்ளது.
யாழ்.மாநகர சபை மற்றும் வலி. தென்மேற்கு பிரதேச சபைகளுக்கு பயணம் செய்து இரண்டு சபைகளையும் அனுபவியுங்கள் பகிர்வு வடிவில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த 2 நாள் பயணத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் 70 பேர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அவசியமற்ற வருகைகளைத் தவிருங்கள் - யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள...
நெதர்லாந்து கடற்பகுதியில் சரக்குகள் கப்பலொன்றில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிகரிப்புக்கு கா...
|
|
|


