யாழ்ப்பாணம் முல்லைத்தீவு உட்பட வடக்கின் 5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை!

Tuesday, November 24th, 2020

வங்களா விரிகுடாவில் உருவாகியிருக்கும் தாழமுக்கம் புயலாக மாறியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இரு நாட்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

“நிவர்” என ஈரான் நாட்டினால் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் இன்று இரவு புல்மோட்டைக்கு எதிரே தரை நோக்கி நகரும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று 24 ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நாட்களில் வடகிழக்கு மாகாணங்களில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றராக இருக்கும் எனவும் சுமார் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பெய்யும் எனவும்

பொதுமக்கள், மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அக்கரைப்பற்று பாலமுனையில் பதற்றம்: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு - பொலிஸ் அதிகாரிகள் உட்பட 12 பேர் வ...
நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை - நீர்கொழும்பில் அமைச்சர் டக்ளஸ்...
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துங்கள் - அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ...