நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை – நீர்கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, August 7th, 2022

நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவ்வாறான அரசியலை செய்ய வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முடியுமானளவு குறைந்த விலையில் கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணையைப் பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்களுடைய சந்திப்பின்போது, மண்ணெண்ணையை விலை அதிகரிக்கப்படுமானால் தாங்கள் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் எனச் சுட்டிக்காட்டிய கடற்றொழிலாளர்கள்,  மண்ணெண்ணையின் விலையை அதிகரிக்க கூடாது என்று  வலியுறுத்திய நிலையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

முன்பதாக சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் தாங்கி மூலம் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தினை மக்கள் பாவனைக்கு வழங்குவது தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய புனரமைப்பு பணிகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: