விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

Wednesday, July 26th, 2017

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் நாளை முதல் இரு நாட்களுக்கு, இந்த நடவடிக்கை நடைபெறவுள்ளது.

இதன்போது வீடுகள் மற்றும் சூழலை பரிசோதனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக, தெரியவந்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 28ம் திகதி பாடசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை விஷேடமாக இடம்பெறவுள்ளதோடு, ஆகஸ்ட் விடுமுறை காலப் பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 301 பேர் டெங்கு நோய் காரணமாக மரணித்துள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: