யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாதியர்கள் ஸ்மார்ட் போன்களுக்குள் மூழ்கியிருந்தமையால் ஏற்பட்ட கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் கடமையின் பொது ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கைத் தொலைபேசியொன்றைத் திருடிய இளைஞருக்குப் பிணை!
பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒ...
அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்து...
|
|