யாழ்ப்பாணம், கிளிநொச்சியின் பல பகுதிகளில் இன்று மின்தடை !
Saturday, October 28th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ் மற்றும் கிளிநொச்சியின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை(28) மின்சாரத் தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம், இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மாவட்டத்தின் ஆறுகால் மடம், கூளாவடி, யாழ். வீதி- மானிப்பாய், ஆனைக்கோட்டை VC, நவாலி, மூத்த விநாயகர் கோயிலடி, சென். பீற்றர்ஸ் தேவாலயப் பிரதேசம், அரசடி, அட்டகிரி, வேலக்கை, பள்ளத்தடி, குளப்பிட்டி, குளப்பிட்டி சாவற்காட்டுச் சந்தி, ஆனைக்கோட்டைச் சந்தி, வராகி அம்மன் கோவிலடி ஆகிய பகுதிகளிலும்,
காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சியின் நாச்சிக்குடா, ஒலுமடு, சேனைப்புலவு, ஒதியமலை, பட்டிக் குடியிருப்பு, மருதோடை, கற்குளம், கரைகட்டுக் குளம்,கோவில் புளியங்குளம், நெடுங்கேணி மொபிற்றல் கோபுரம், நெடுங்கேணி நீர்ப்பாசன சபை ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
சனிக்கிழமையிலேயே உள்ளூராட்சி தேர்தல் - மகிந்த தேசப்பிரிய
கொரோனா தொற்று: பாஸ்டரின் தகவலை சுவிஸ்லாந்து அரசு ஊடாக பெற்றுக் கொண்ட இலங்கை!
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது – துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!
|
|
|
நுண்நிதிக்கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரி...
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத 1 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு; 45 ஆயிரம் பேர் அரச சேவையில் இ...
தனியார் பல்கலைக்கழகங்களின் தரநிலைகள் தொடர்பில் ஒழுங்குப்படுத்த வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது -...


