யாழ்ப்பாணம் -காரைநகர் இடையே விரைவு தபால் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையேயான விரைவுத் தபால் சேவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தபாலக வாகனம் மூலம் இந்தத் தபால் சேவை தினமும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண தலைமை தபாலகத்துக்கும் சங்கானை, சுழிபுரம், வட்டுக்கோட்டை, மானிப்பாய், அளவெட்டி, பண்டதரிப்பு, காரைநகர் ஆகிய தபாலகங்களுக்கும் இடையே இந்தத் தபால் சேவை தினமும் துரித கதியில் இடம்பெறும்
குறித்த தபாலகங்களில் சேகரிக்கப்படும் தபால்கள் யாவும் இந்த வாகனம் மூலம் காரைநகருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே தினமும் துரிதமாக அனுப்பி வைக்கப்படும் என்று தலைமைத் தபாலகம் தெரிவித்தது
இதற்;கு முன்னர் காரைநகருக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான தபால் சேவைகள் யாவும் இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்து மூலமே இடம்பெற்றன.
Related posts:
காணாமற்போனவர்கள் தொடர்பில் இறப்பு பதிவுசெய்யும் கால எல்லை நீடிப்பு – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவா...
மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் - மத்திய வங்கியின் புதிய ஆளுநர் வலியு...
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவர் பதவி விலகல்!
|
|