யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரிப்பு!

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் சாதாரண அளவை விட 04 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பதுளை, கட்டுகஸ்தோட்டை, நுவரெலியா மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேசங்களில் வெப்பநிலை சாதாரண அளவை விடவும் 03 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், குருணாகல், புத்தளம், இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இரவு நேரத்திலேயே இவ்வாறு வெப்பநிலை சாதாரண அளவை விடவும் அதிகரித்து காணப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அபிவிருத்திக்கே முன்னுரிமை – ஜனாதிபதி
அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!
மனித உரிமைககளை மீறும் அளவிற்கு வீதித் தடை - மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை வட்டுக்கோட்டை பொலிஸார் ...
|
|