அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!
Sunday, April 18th, 2021
நேற்றையதினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் என கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நேற்றையதினம் 57 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 49 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 33 பேரும் திருகோணமலையில் 20 பேரும் யாழ்ப்பாணத்தில் 15 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 14 பேரும் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்
அத்துடன் கம்பஹாவில் 22 பேருக்கும் களுத்துறையில் 11 பேருக்கும் கண்டியில் 7 பேருக்கும் மாத்தறையில் 10 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஆமை வேகத்தில் - சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பலரும் அதிருப்தி...
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
|
|
|


