யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு 3 ஏ !

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றுப் புதன்கிழமை(06) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் கஜரோகணன் கஜானன் கணிதத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மற்றும் இரவீந்திரன் பானுப்பிரியன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், சிவபாலன் சங்கீர்த்தனன் நான்காமிடத்தையும், செல்வரத்தினம் லாவர்த்தன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் 14 மாணவர்கள் கணிதத் துறையில் 3ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.
உயிரியல் துறையில் திருஞானசம்பந்தன் ஆகாசன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், யோகேந்திரராசா சாகித்தியன் நான்காமிடத்தையும், திருமாறன் இளமாறன் ஐந்தாமிடத்தையும், மேலும் நான்கு மாணவர்கள் 3 ஏ சித்தியையும் பெற்றுள்ளனர்.

Related posts:
இரண்டு கோடி லஞ்சம் பெற்றதன் மூலமே கூட்டமைப்பின் மோசடித்தனம் மக்களுக்கு வெளிவந்தது - கோவிலாக்கண்டி கி...
கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பரீட்சை!
அவதானமாக செயற்பட வேண்டும் – எச்சரிக்கும் பொலிஸார் !
|
|