யாழ்ப்பாணப் பல்கலையின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தெரிவு ! யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய பீடாதிக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. மருத்து பீட, பீடச் சபை உறுப்பினர்களுடையியே இடம்பெற்ற வாக்கெடுப்பில் வைத்தியக் கலாநிதி சுரேந்திரகுமாரன் 22 வாக்குகளைப் பெற்று 4 வாக்குகளால் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கொவிட் 19 தடுப்புச் செயலணியின் இணைப்பாளராகப் பதவி வகிக்கும் வைத்தியக் கலாநிதி சுரேந்திரகுமாரன், மருத்துவ பீட சமுதாய மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்பதுடன். இவர் சமுதாய மருத்துவத் துறையின் தலைவராக 2012 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..
Monday, September 13th, 2021
Related posts:
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன் வழங்கப்பட்டது - கல்வி அமைச்சின் செயலாளர் தெர...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பாகிஸ்தான் விமான படையின் தலைமை அதிகாரி!
அடுத்த வருடம்முதல் 3 தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம்!
|
|
|


