யாழ்ப்பாணத்து இளம் பெண் கொழும்பில் சடலமாக மீட்பு!

சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் வெள்ளவத்தை கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
நண்பகலளவில் தன்னுடைய ஸ்கூட்டரில் வெள்ளவத்தை மிராஜ் ஹொட்டலுக்கு முன்பாக வந்த குறிப்பிட்ட பெண், மோட்டார் சைக்கிளை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு கடலுக்குள் சென்றதாகவும், சில நிமிடங்களின் பின்னர் கடல் அலைகளில் அவரது சடலம் அடித்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்
Related posts:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார்!
இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு - கல்வித்துறையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு ...
கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதமே யாழ் ராணி மாலையில் தாமதிக்கின்றது - அனுரா...
|
|