யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகின்றது “கரிகோச்சி”
 Monday, February 26th, 2018
        
                    Monday, February 26th, 2018
            யாழ்ப்பாணத்திற்கு கரிகோச்சி ரயில் இன்று வரவுள்ளது. மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
நேற்றுமுன்தினம் கல்கிஸையிலிருந்து திருகோணமலைக்கு சென்ற ரயில், அங்கிருந்து நேற்று கல்லோயா, அனுராதபுரம் சென்று அங்கிருந்து இன்று 8 மணியளவில் பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வரவுள்ளது. இங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்தை அடையவுள்ளது.
நாளை காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து கல்கிஸை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. , ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் இந்த ரயில் பயணிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
தீர்வு விடயத்தில் சம்பந்தரின் நிலைப்பாடு என்ன? தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன...
குடாநாட்டில் அதிரடிப்படையைக் களத்தில் இறக்க நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து இராஜாங்க அமைச்ச...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        