யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனா தொற்று மரணமொன்று பதிவு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்!

Monday, April 15th, 2024

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனா தொற்று மரணமொன்று பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், அராலியில் தங்கியிருந்த நிலையில், காய்ச்சல் காரணமாக இரண்டு நாள்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில்  சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று(15)  உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


பல்கலைகழக வெட்டுப்புள்ளி தொடர்பில் - தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத...
தபால் ஊழியர்களின் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு - மத்திய தபால் பரிமாற்றகத்தில் 5 இலட்சம் கடிதங்கள் தேக்...
ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!