யாழ்ப்பாணத்தில் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க  பேரணி!

Thursday, June 30th, 2016

யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பேரணி இன்று(30) காலை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி இறுதியாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நிறைவடையவுள்ளது.

இந்த பேரணியில் மாணவர்கள், பொது மக்கள், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். சித்திரவதையினால் பாதிக்கப்ட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினமான யூன் 26 ஆம் திகதியை நினைவு கூரும் முகமாக இந்த பேரணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

parani-1

parani-2

parani-4

Related posts:

கடந்தகால அனுபவங்களை பாடமாக கொண்டு இனிவருங் காலத்தை வெற்றிகொள்வோம் - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை ...
ரயில் சேவைகள் சில நிறுத்தப்பட்டுள்ளமைக்கு அரசியல் ரீதியான காரணம் எதுவுமில்லை - அமைச்சர் பந்துல விளக்...
கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அமைப்பதற்கு அரை பில்லியன் டொலர்களை வழங்குவத...