யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 61 வர்த்தகர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவீடு!

Wednesday, November 16th, 2022

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில்  61 வர்த்தகர்ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்  மாவட்ட  பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின்   பொறுப்பதிகாரி விஜிதரன் தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள்  அதிகார சபையினரின் கள விஜயத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு

ஒக்ரோபர் மாதம் 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பணம்  வர்த்தகர்களிடம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

1.பொருட்களுக்கான சந்தை விலை யினை காட்சிப்படுத்தாமை

2.குறிக்கப்பட்ட விலை  மற்றும் கட்டுப்பாட்டு விலையினைமீறிபொருட்களை விற்றமை

3.ஏமாற்றும் நோக்கோடு  பண்டத்தின் மீது பொறிக்கபட்ட விலையினை மாற்றி விற்பனை செய்தமை 4.நிறை குறைவாக பாண் விற்பனைசெய்தமை.உற்பத்தி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளுடன்  அதிகார சபையினரின் கள விஜயத்தின் போது  பிடிபட்ட வர்த்தகர்களுக்கு   எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்பான  வியாபாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்

எனவே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த வியாபாரிகள் சில்லறைவியாபாரிகள் மிகவும் அவதானமாக தமது வியாபார செயற்பாட்டை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயற்படுத்துமாறு யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அறிவித்துள்ளனர்,

000

Related posts:

சிறார்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சரின் யோசனை...
அரச பணியாளர்கள் தங்களது பொறுப்புக்களை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சரிவர நிறைவேற்ற வேண்டும் – ஜனா...
தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது தேர்தல்கள் ஆணைக்...