யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து கோர விபத்து: நால்வர் பரிதாப பலி!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் படுகாயமடைந்துள்ளதமாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியார் நிறுவனங்களின் பதிவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது!
இயற்கை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு!
எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் அவதானம்!
|
|