மின்விளக்கு சமிக்ஞைகள் மூலம் 600 மில்லியன் மோசடி – புகையிரத ஊழியர்கள் புகார்!

Tuesday, February 27th, 2018

நாட்டில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கான மின்விளக்கு சமிக்ஞைகளைப் பொருத்தும் டெண்டர் மூலம் 600 மில்லியன் ரூபா மோசடி நடைபெறவுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 200 பாதுகாப்பற்ற கடவைகளுக்கு மின்விளக்கு சமிக்ஞைகளைப் பொருத்த புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான பரீட்சார்த்த முயற்சியில் ஒரு கடவைக்கான மின்விளக்குச் சமிக்ஞையை சுமார் 20 லட்சம் ரூபா செலவில் புகையிரதத் திணைக்களத்தின் பொறியியல் பிரிவு ஊழியர்கள்உருவாக்கியிருந்தனர்.

தற்போது தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்படவுள்ள டெண்டரில் ஒரு கடவைக்கான மின்விளக்கு சமிக்ஞைக்கு 50 லட்சம் ரூபா வரை விலைமனு வழங்கப்பட்டுள்ளது. இதனால்மின்விளக்கு சமிக்ஞையொன்றுக்கு 30 லட்சம் வீதம் 200 மின்விளக்கு சமிக்ஞைகளுக்கும் சுமார் 600 மில்லியன் ரூபா மோசடி செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின்பொறியியல் பிரிவு ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த மோசடியில் புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: