யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு !

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக வட கடல் பகுதிக்குள் வந்த அகதிகள் 4 பேர் யாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அவர்களில் ஒருவருக்கு நோய் வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (11) காலை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வருகிறது அபராதத் தொகை!
எதிர்வரும் 18ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்தில்!
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|