யாழில் 39 மருத்துவர்களுக்கு நியமனம்!
Saturday, March 2nd, 2019
மத்திய சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கமைய உள்ளகப் பயிற்சியினை நிறைவு செய்த 39 மருத்துவர்களுக்கு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணியகத்தில் வைத்து நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு 5 மருத்துவர்கள் யாழ்.பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை ஆகிய ஆதார மருத்துவமனைகளுக்கும், கொடிகாமம், சங்கானை, புங்குடுதீவு, வேலணை, வரணி, வல்வெட்டித்துறை, கரவெட்டி, காரைநகர் ஆகிய பிரதேச மருத்துவமனைகளுக்கும், பண்ணை மருத்துவ நிலையம் ஆகிய இடங்களுக்கும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா?
நாடு முழுவதும் வரண்ட வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பதால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்...
|
|
|


