யாழில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது!

10 கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த இளைஞன் ஒருவனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞனை யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் வைத்து நேற்று (19) இரவு யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன், கஞ்சா பொதிகளை விற்பனைக்காக கொண்டு சென்ற போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்
Related posts:
வித்தியா கொலைச் சந்தேகநபர்களை விசேட அனுமதியுடனேயே சந்திக்கலாம் - நீதவான் உத்தரவு
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் ...
|
|