யாழில் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

Thursday, October 26th, 2017
யாழ். குடாநாட்டில் மீள்குடியேறியுள்ள முஸ்லீம் மக்களுக்கு அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், யாழ். முஸ்லீம் மக்களுக்கான வீட்டுத் திட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறு கோரியும்  இன்று வியாழக்கிழமை(26) முற்பகல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
யாழ். முஸ்லீம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வீடமைப்புத் திட்டத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.

Related posts:

கல்வி அமைச்சின் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்தத் தீர்மானம் - கல்வ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை அமுல்படுத்த தவறிவிட்டார் - வன்முறைகளுக்கு அடக்கு முறை தா...
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளது - தகவல் அறியும் சட்டத்தின் ...