யாழில் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றல்!

Thursday, January 24th, 2019

சுன்னாகம் பகுதியில் மதுபானம் தயாரிக்க பயன்படும் சட்டவிரோதமான எதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை யாழ். விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 7500 லீட்டர் எதனோல், 50 லீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் இவற்றை கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இதை வைத்திருந்த வீட்டு உரிமையாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய போதைப்பொருள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: