யாழில் கோர விபத்து – குடும்பஸ்தர் பலி!
மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
ஆறுகால் மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் வியஜராசா என்னும் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவர்.
இவர் மானிப்பாய் வீதி ஆறுகால்மடப் பகுதியில் சிறு வியாபார நிலையம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.
வழமை போன்று இன்று காலையும் வீட்டில் இருந்து தனது வியாபார நிலையத்தை திறப்பதற்காக நடந்து சென்று வீதியைக் கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணத்தில் இருந்து மானிப்பாய் நோக்கி மிக வேகமாக பயணித்த உந்துருளி அவர் மீது மோதியுள்ளது.
இதனால் வீதியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.காவல் நிலைய போக்குவரத்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய கொள்கை
இலங்கை வரவுள்ள 3வது இந்தியக் கப்பல்!
விவசாய உற்பத்தி கருதியதாக துறைசார்ந்தோருக்கு பல்வகை நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சரவைப் பேச்சா...
|
|
|


