யாழில் எலிக்காய்ச்சலால் மாணவன் இறப்பு!
Thursday, November 29th, 2018
எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைச் சேர்ந்த சிவசுதன் தவக்குமரன் (வயது 17) காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்.
எலிக் காய்ச்சல் என்று அறிமுகப்படுத்தப்படும் லெற்றோ வைரஸ் மாணவனைத் தாக்கியிருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
Related posts:
யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை ஸ்தாபிப்பு!
போர்ப் பயிற்சிகளை நடத்துவதற்காக ரஸ்யாவின் பிரமாண்டமான முன்று போர்க் கப்பல்கள் இலங்கை வருகை!
நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வர...
|
|
|


