யாழில் அண்மைய நாட்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – சமூக ஆர்வலர்கள் கவலை !

பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாண குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன
யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத் தடையின் காரணமாக வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் அற்ற நிலையில் மூடப்பட்டுள்ள கடைகளை உடைத்து திருட்டு கும்பல் கைவரிசை காட்டி வருகின்றது
அத்தோடு வீடுகளில் குடியிருப்பாளர்கள் இருக்கின்ற போதிலும் வீடுகளுக்குள் சூட்சுமமான முறையில் உள்நுழைந்து கிணற்றடியில் உள்ள மோட்டார் மற்றும் ஏனைய பெறுமதியான தளபாடங்களை திருடிச்செல்கின்ற சம்பவங்கள் யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளது
குறித்த திருட்டு சம்பவங்களில் சில திருட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் திருட்டு சம்பவங்கள் குறைந்ததாக இல்லை
குறிப்பாக வீடுகளில் தென்னை மரங்களில் தேங்காய் திருடுதல் மேலும் மூடப்பட்டுள்ள பாடசாலை,ஆலயங்கள், தேவாலயங்கள், கடைகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன இது தொடர்பில் பொலிசார் பாதுகாப்பு பிரிவினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Related posts:
|
|