யாசகம் கேட்போருக்கு 1 500 சம்பளத்தில் வேலை – மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு!

கொழும்பில் யாசகம் கேட்போர் பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் ரீதிகம மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு, நாளொன்றுக்கு ஆயிரத்து 500 ரூபா சம்பளத்தில் வேலை வழங்கப்படும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகரில் யாசகம் கேட்பதற்கு கடந்த முதலாம் திகதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்து, தொடருந்தில் ஏறி யாசகம் கேட்டல், போக்குவரத்து சமிக்ஞைகளில் யாசகம் கேட்டல், வீதிகளிலிருந்து யாசகம் கேட்டல் உள்ளிட்டவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையும் மீறி யாசகம் கேட்பவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் ரீதிகம மறுவாழ்வு மையத்துக்கு உடனடியாகவே அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களில் வேலை செய்ய விரும்புவோருக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபா சம்பளத்தில் வேலை வழங்கப்படும். மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள தாழ் நில அபிவிருத்தி சபையின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
Related posts:
|
|