மோதிக் கொண்ட அமைச்சர்கள்!
Wednesday, August 30th, 2017
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கின் செயற்கை ஓடுதளத்தை மீண்டும் புனரமைப்பதற்காக தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் அர்ஜூன ரணதுங்க கருத்துக்களை முன்வைக்கும் போது இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் தொடர்பாக அமைச்சர்கள் இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
Related posts:
இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைபியுங்கள் - மருத்துவ சங்கம் கோரிக்கை!
சீனா இலங்கையின் உண்மையான நண்பன் - உதவிகளை வழங்குவதற்கு எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை –...
வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து - இலங்கையில் சட்டப்படி செல்லுபடியாகும் -மேன்முறையீட்டு நீதிமன்ற...
|
|
|


