மோட்டார் போக்குவரத்து விதி மீறல்: எட்டரை கோடி ரூபா வருமானம்!
Thursday, May 3rd, 2018
மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதங்களின் மூலம் எட்டரை கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் இவ்வாறு அதிகளவு வருமானத்தை கொழும்பு நீதவான் நீதிமன்ற மோட்டார் போக்குவரத்துப் பிரிவு நீதிமன்றம் ஈட்டியுள்ளது. இதன்படி மோட்டார் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட அபராதங்களின் ஊடாக சுமார் எட்டரை கோடி ரூபா வருமானம் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே ஐந்து இலட்சம் ரூபா இவ்வாறு அபராதப் பணமாக திரட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
வலி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களின் தந்தையாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி...
தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!
அரிசிக்கான அபராதம் தொடர்பான அவசர சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப...
|
|
|


