மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் வெளியிடப்பட்டது சுற்று நிருபம்!
Friday, June 14th, 2024
மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வீதிகளில் மோட்டார் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட மாதாந்த கொடுப்பனவு இவ்வாறு அதிகரிக்கப்பட உள்ளது.
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் விசேட மாதாந்த கொடுப்பனவு 1800 ரூபாவிலிருந்து 6000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
பரிசோதகர் தர உத்தியோகத்தர் ஒருவரின் விசேட மாதாந்தக் கொடுப்பனவு 2000 ரூபாவிலிருந்து 7000 ரூபாவாகவும், மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவரின் விசேட கொடுப்பனவு 2500 ரூபாவிலிருந்து 7000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தி சிறந்த சேவையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
|
|
|


