மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கி சூடு – மன்னாரில் இருவர் படுகொலை!

Thursday, August 24th, 2023

மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிக்கண்டல் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது..

மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 மற்றும் 53 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பள்ளிமடு, உலியன்குளம் பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்தனர்.   கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்கேநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை  அடம்பன் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


புதிய அரசியலமைப்பு பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வாக அமையும்  - சுவிசர்ர்லாந்து சபாநாயகர் நம்பிக்கை...
பூநகரி அரசினர் பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு நண்பகலுடன் மூடல் : வடக்கு மாகாணசபை மௌனம் - நோ...
நீதிமன்றில் ஆஜராகாத சந்தேகநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் - நீதிச்சேவை ஆணைக்குழு அறிவிப...