மோசமான விலை உயர்வினை கண்டித்து யாழ்.நகரப்பகுதியில் மாபெரும் போராட்டம் !
Tuesday, May 29th, 2018
அரசாங்கத்தின் மோசமான விலை உயர்வினையும் மோசமான வரி விதிப்புக்களை கண்டித்து யாழ்.நகரப்பகுதியில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் விலை உயர்வுஇ வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விலைகளை கூட்டு வரிகளை போடு கட்டளையிட்டது நாணய சபையும் உலக வங்கியும்.
பணமுதலைகளுக்கு வரி குறைப்பு பாமர மக்களுக்கு வரி விதிப்பு
ஆளுவோருக்கு உல்லாச வாழ்க்கை உழைப்போருக்கு வாழ்க்கை நெருக்கடி
சம்பந்தன் சுமந்திரன் ஆட்சியின் பக்கம் தமிழ் மக்களின் வாழ்வு கண்ணீரில் மூழ்குது
போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு கோசங்களை இட்டவாறு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள்.
Related posts:
|
|
|


