மொழி உரிமை அமுலாக்கதில் உள்ள பிரச்சினைகள் குறித்து 24 மணிநேரமும் முறைப்பாடு செய்யலாம்!

மொழி உரிமை அமுலாக்கதில் உள்ள பிரச்சினைகள் குறித்து வட்சாப், வைபர், ஐ.எம்.ஓ மற்றும் முகநூல் மூலம் 24 மணிநேரமும் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதற்காக நவீன அழைப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 071 4 854 734 என்ற இலக்கத்துக்கு தொடர்பினை ஏற்படுத்தலாம் எனவும் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 1956 உடனடி அழைப்பு இலக்கமும், பாவனையில் உள்ளது.
பெயர் பலகைகள், பொது பாவனை படிவங்கள் என்பன மும்மொழிகளில் இல்லாதிருத்தல் மற்றும் மொழி பாவனையில் எழுத்து இலக்கண பிழைகள் இருக்குமாயின், அவற்றைப் புகைப்படம் பிடித்து தமக்கு அனுப்பி வைக்கலாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
மண்ணெண்ணெய் மற்றும் டீசல் நிவாரணம் வழங்க அரசு முடிவு!
மார்ச் மாதம் 31 ஆம் திகதிமுதல் குறுகிய கால பாவனைக்குட்படுத்தும் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை – வெளிய...
கோழி இறைச்சி - முட்டை விலைகளில் வீழ்ச்சி - தீர்வை வரியின்றி விலங்கு உணவை இறக்குமதி செய்ய நிதி அமைச்ச...
|
|