மொரட்டுவ பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்பு!

மொரட்டுவை பல்கலை இறுதியாண்டு மாணவர்களின் கூட்டு முயற்சியில் மனித மூளையினால் கட்டுப்படுத்தக் கூடிய ரோபோ இயந்திரம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இயந்திரவியல் பொறியியல் பிரிவின் இறுதியாண்டு மாணவர்களான இசிர நாஒதுன்ன சாமிக்க, ஜனித் பெரேரா மற்றும் சமீர சந்தருவன் ஆகிய மூவருமே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி திலின லலிதரத்ன மற்றும் கலாநிதி ருவன் கோபுர ஆகியோரின் வழிகாட்டல் இக்கண்டு பிடிப்புக்கு உறுதுணையாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித மூளையிலிருந்து வெளியிடப்படும் ஈ.ஈ.ஜீ. அலைகளின் மூலம் இந்த ரோபோ கட்டுப்படுத்தப்படுவதுடன் விசேட தேவையுடையவர்களுக்கு தேவையான உணவை அளிக்கக்கூடிய ஆற்றலும் இதற்கு உண்டென தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட பயிற்சிகள் ஏதுமின்றி பெரும்பாலும் இந்த ரோபோ மூளையினால் பிறப்பிக்கப்படும் கட்டளை அல்லது அலைகளின் மூலம் தொழிற்படுகிறது. தற்போது உடலாரோக்கியம் கொண்டவர்களை கொண்டு இந்த பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, விரைவில் விசேட தேவையுடையவர்களை ஈடுபடுத்தி இதன் மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த ரோபோ பரிசோதனைக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிர்மாணமானது Steady State Visual evoked Potentials என்ற விசேடமான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் மனித மூளையினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய இது தொழிற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரஷ்யாவிற்கு செல்லும் ஜனாதிபதி !
வாழைப்பழ விலை திடீர் உயர்வு!
உலகின் சக்திகளிடம் சரணடைய முடியாது - கடன் பொறியிலிருந்து விடுபடுவதற்காக கடன் மறுசீரமைப்பு அடுத்த ஓரி...
|
|