மொனராகல DAG ஆடை தொழிற்சாலை பிரதமரினால் திறந்து வைப்பு!

Saturday, March 6th, 2021

மொனராகல DAG ஆடை தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

500 மில்லியன் ரூபாய் முதலீட்டில், டீ.ஏ.ஜீ. அப்பரல் (பிரைவட்) லிமிடட் புதிய ஆடை தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.

இதன்மூலம் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 3000 பேர் வரை மறைமுக நன்மைகளை அனுபவிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய ஆடை தொழிற்சாலை ஊடாக ஆடை ஏற்றுமதியில் ஆண்டிற்கு 3.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆடை தொழிற்சாலையை வைபவரீதியாக திறந்துவைத்த பிரதமர், அங்கு உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெறும் முறை குறித்தும் கண்காணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: