மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதம் சுகாதாரத் துறைக்கு!

Thursday, June 21st, 2018

2020 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை சுகாதார சேவைக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுவரை ஒருபோதும் மக்களுக்குக் கிடைக்காத சுகாதாரத்துறை சார்ந்த சலுகைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கிடைக்கப் பெற்றுள்ளன.
புதிய வரி சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் நிதி மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் இந்த வரிச் சட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டுமாதங்களுக்குள் புதிதாக 69 ஆயிரம் வரி கோப்புக்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை 4 இலட்சம் வரிக் கோப்புக்களே காணப்பட்டன. புதிய வரி சட்டம் அமுல்படுத்த பட்டிருப்பதை தொடர்ந்து 30 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
தற்போது 18 சதவீதமாக உள்ள நேரடி வரியை 40 சதவீதம் வரை அதிகரிப்பதற்கும் 82 சதவீதமாக உள்ள மறைமுக வரியை 60 சதவீதம் வரைகுறைப்பதற்கும் புதிய வருமான வரி சட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமது பொறுப்புக்களை விளங்கிக் கொண்டு வரி செலுத்தினால் மக்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: