மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

Thursday, May 18th, 2017

யுத்தத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த மக்களின் நினைவாக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுக்கான சுடர் ஏற்றிவைக்கப்பட்டு இறந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி வாழும் உறவுகளால் மௌனவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது..

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் பிரத்தியேகமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் இன்றையதினம் சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் தமது இன்னுயிர்களை ஈந்த உறவுகளை நினைவு கூர்ந்து மௌனவணக்கம் செலுத்தப்பட்டது.

யுத்தம் காரணமாக இன்னுயிர்களை ஈந்த எமது மக்களை நினைவுகூருவதற்கு பொருத்தமான இடம் ஒன்று இல்லாத காரணத்தினால் மக்கள் பல பகுதிகளிலும் சுடரேற்றி தமது உறவுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கங்க போராளிகளையும் பொதுமக்களையும் நினைவு கூரும்பொருட்டு பொருத்தமான இடம் ஒன்றில் நினைவு சதுக்கம்  ஒன்று அமைக்கப்படவேண்டும் என்றும் அதற்கென ஒரு பொதுவான தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: