வெளிநாட்டில் வாழும் இலங்கை தொழிலாளர்களுக்கு தீர்வையற்ற வாகன அனுமதி பத்திரம்?

Wednesday, November 9th, 2016

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தொழிலாளர்களுக்கு தீர்வையற்ற வாகன அனுமதி பத்திரம் ஒன்றை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இந்த தொடர்பில் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் இம்முறை 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திலாவது அந்த சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தொடர்பிலான அமைப்பொன்று கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு பிரதான வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களின் இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் செயலாளர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.இலங்கைக்கு அதிகமான வருமானத்தை பெற்றுக் கொடுப்பவர்களில் முன்னணியில் இருப்பது வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தான். எனினும் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மிகவும் குறைவு.

அவர்களின் பிரதான கோரிக்கை தீர்வை வரியின்றி வாகன ஒன்றை இலங்கைக் கொண்டு வருவதாகும். தற்போது அரசாங்கம் பல்வேறு நபர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றது.எனினும் தொடர்ந்து அந்த நிவாரணத்தை வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வழங்குவதனை அரசாங்கம் புறக்கணித்து வருகின்றது.

மேலும் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு முன்னர் எந்த ஒரு இடத்திலும் தீர்வை வரியின்றி பொருட்களை கொள்வனவு செய்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டது. எனினும் தற்போது விமான நிலையத்தில் மாத்திரமே அவ்வாறு பொருட்கள் கொள்வனவு செய்ய முடியும்.

கிட்டத்தட்ட 20 லட்சம் தொழிலாளர்கள் வெளிநாட்டில் உள்ளனர். அவர்கள் நாட்டிற்கு வரும் போதும் பெற்றுக் கொள்ள வேண்டிய பொருட்களை தெரிவு செய்து கொள்வனவு செய்வதற்காக நாட்டின் பிரதான அனைத்து நகரங்களிலும் தீர்வை வரியற்ற கடைகளை திறந்து நிவாரணம் வழங்குமாறு வெளிநாட்டு தொழிலாளர்கள் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1-35

Related posts: