மே மாத 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்றுமுதவல் வழங்கப்படுகின்றது – ஜனாதிபதி ஊடக பிரிவு!
Monday, May 11th, 2020
இடர்கால நிவாரணமாக வழங்கப்படும் மே மாதத்திற்கான ஐயாயிரம் ரூபா வழங்கும் செயற்பாடு இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளதாக.ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வீடுகளுக்கு சென்று கொடுப்பனவுகளை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, முதியோர், விஷேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளர்கள், விவசாய ஓய்வூதிய பெறுநர்கள், மீன்பிடி ஓய்வூதிய பயனாளிகள் போன்றோருக்கே இந்த பணம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை மறுப்பு!
உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு 18 வருடங்கள் !
கிண்ணியா படகுப்பாதை - ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்ப...
|
|
|


