மே மாத நடுப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் இறுதி செய்யப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Thursday, April 4th, 2024
எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டத்தின்படி, இந்த வருடம் பொதுத்தேர்தலே அன்றி, ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் எனவும் அதற்காகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பாலித பெர்னாண்டோ நியமனம்
சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி - கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பால் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியி...
|
|
|


