வடக்கில் கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!

Thursday, June 28th, 2018

வடமாகாணத்தில் பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கை கரையோரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.இந்த பிரதேசங்களில் வாழ்வாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடிய முக்கிய தொழிற்துறையாக கடற்றொழில் தொழிற்துறை அடையாளம் காணப்பட்டுள்ளது.இதற்கமைவாக இந்த பிரதேசத்தில் கடற்றொழில் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதற்காக 158 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பட்டுள்ளது.

இதற்கமைவாக பருத்தித்துறை மற்றும் பேசாலை ஆகிய இடங்களில் 2 கடற்றொழில் துறைமுகங்களும்  யாழ்ப்பாணம் மண்டைதீவில் நங்கூரம் இடுவதற்கான வசதிகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 8 கடற்றொழில் இறங்குதுறைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 கடற்றொழில் இறங்குதுறைகளும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 கடற்றொழில் இறங்குதுறைகளையும் மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும்இ கடற்றொழில் துறைமுகம் நங்கூரமிடும் இடங்கள் மற்றும் இறங்குதுறைகளை நிர்மாணித்தல் இஅபிவிருத்தி செய்தல் நீர் உயிரின உற்பத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கென ஆலோசனை நிறுவனம் ஒன்றை தெரிவுசெய்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் விஜயமுனி சொய்சா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: