மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் – நிதி அமைச்சு அறிவிப்பு!
Sunday, April 26th, 2020
ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது
அத்துடன் குறித்த நடவடிக்கைக்கு தேவையான நிதி திறைசேரியில் உள்ளது என்று நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே தெரிவித்துள்ளார்.
“ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக்கொடுப்பனவுகளான சிறப்புத் தேவையுடையோர், சிறுநீரகம், சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் அரசு ஊழியர்களின் சம்பளம் மே 25ஆம் திகதிக்குள் வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழர் பகுதி எங்கும் விஷேட பூஜை வழிபாட...
புதிய இராணுவத் தளபதி கூறும் உறுதி!
விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


